Monday 5 September 2016

ஆனாலும் ஒரு செண்டிமெண்ட் .. வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு திருமணம் ஆகவே இல்லை



ஆனாலும் ஒரு செண்டிமெண்ட் ..
வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு 
திருமணம் ஆகவே இல்லை



வெண்ணிற ஆடை மூலம் திரைக்கு அறிமுகமான நிர்மலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நிர்மலாவின் சொந்த ஊர் கும்பகோணம். தந்தை பாலகிருஷ்ணன், தாயார் ருக்மணி. 

பாலகிருஷ்ணன், தஞ்சை நீதிமன்றத்தில் "ஜுரி"யாகப் பணிபுரிந்தவர். வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கலாமா, விடுதலை செய்யலாமா என்று நீதிபதிக்கு ஆலோசனை வழங்குவோருக்கு "ஜுரி" என்று பெயர். செல்வாக்கு மிக்க செல்வந்தர்களை இப்பதவியில் நியமிப்பார்கள். 



நிர்மலாவின் முன்னோர்கள் செல்வந்தர்கள். "அரண்மனைக்குடும்பம்" என்று பட்டப்பெயர் பெற்றவர்கள். நிர்மலாவின் குடும்பத்துக்கும், கலைத்துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிர்மலா சினிமாவில் சேர்ந்தது எதிர்பாராமல் நடந்தது. 


ஒருநாள் நிர்மலாவின் தந்தை ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச்சுவடிகளை ஆராய்வதற்காக மைசூரில் இருந்து வந்து கொண்டிருந்த வாசுதேவாச்சாரியார் என்பவரை சந்தித்தார். அவர் பரத நாட்டியம் பற்றி உயர்வாகப் பேசினார். "ராஜராஜசோழனே தன் மகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்தார்" என்று கூறினார். 

இதனால், பாலகிருஷ்ணனுக்கு நடனம் மீது ஆர்வம் ஏற்பட்டது. நிர்மலாவுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். இதை உறவினர்கள் எதிர்த்தனர். ஆனால், பாலகிருஷ்ணன் பின்வாங்கவில்லை. கும்பகோணம் சண்முகசுந்தரம்பிள்ளை என்ற நடனக் கலைஞரிடம் நிர்மலா நடனம் பயில ஏற்பாடு செய்தார். 






நிர்மலாவின் 6-வது வயதில் அவரது நடன அரங்கேற்றம், கும்பகோணத்தில் நடைபெற்றது. பின்னர், சென்னையில் அவரது நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கூட்டம் வரவில்லை. இதனால் நிர்மலாவின் தந்தை வருத்தம் அடைந்தார். 


"சினிமாவில் நடித்தால்தான் புகழ் பெறமுடியும். பெரிய கூட்டமும் வரும்" என்று சபாவைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். நிர்மலா, நடனத்தில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, அப்போது வைஜயந்திமாலா நடத்தி வந்த "நாட்டியாலயா" என்ற நடனப்பள்ளியில், நிர்மலாவை அவர் தந்தை சேர்த்து விட்டார். 



பண்டரிபாயை கதாநாயகியாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கவும் ஏற்பாடு செய்தார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் வரை செலவு செய்து, சில ஆயிரம் அடி வரை படத்தை எடுத்தார். ஆனால், "படம் எடுக்கக்கூடாது" என்று அண்ணன் எதிர்த்ததால், மேற்கொண்டு படத்தயாரிப்பைத் தொடராமல் பாதியில் கைவிட்டார், பாலகிருஷ்ணன். 

இந்த சமயத்தில், முற்றிலும் புதுமுகங்களை வைத்து, "வெண்ணிற ஆடை" என்ற படத்தைத் தயாரிக்க டைரக்டர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பொருத்தமான புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தார். 




பத்திரிகையாளர் நவீனன், வைஜயந்திமாலாவின் நடனப் பள்ளியில் நிர்மலாவைப் பார்த்தார். "இவ்வளவு அழகான பெண், சினிமாவில் நடித்தால் நிச்சயம் புகழ் பெறுவார்" என்று எண்ணினார். நிர்மலாவின் தந்தையை சந்தித்து, "டைரக்டர் ஸ்ரீதர், புதுமுகங்களை வைத்து ஒரு படம் தயாரிக்கப்போகிறார். நீங்கள் அவரை சந்தியுங்கள். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறினார். 



நிர்மலாவின் தந்தைக்கு, சினிமா என்றால் பிடிக்காது. எனினும், நிர்மலாவின் நடனத் திறமையை வெளிப்படுத்த சினிமா உதவும் என்று எண்ணினார். நிர்மலாவுடன் சென்று, ஸ்ரீதரை சந்தித்தார். 









"மேக்கப்" டெஸ்ட்டில் நிர்மலா வெற்றி பெற்றார்.
காதலிக்க நேரமில்லை படத்திற்கு புதுமுகம் தேடி கொண்டிருந்தார் ஸ்ரீதர் .
அப்போது நடிகைகள் தேர்வு முடிந்து விட்டிருந்தது .எனவே அடுத்த படத்தில் சான்ஸ் தருகின்றேன் என்கிறார் . அடுத்த படம் தான் வெண்ணிற ஆடை படம் .இந்த படத்திலும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஸ்ரீதர் முதலில் சான்ஸ்  கொடுக்கவில்லை . 















வட இந்திய சூப்பர் ,டூப்பர் ஸ்டார் ஹேமாமாலினி நடித்தார் .அவர் ஒல்லியாய் இருந்ததால் அந்த படத்தில் இருந்து தூக்கினார் . அப்புறம் அந்த வேடத்தில் அழகு மங்கையாய் நிர்மலா ஜொலித்தார்  



 "வெண்ணிற ஆடை"யில் நிர்மலாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. 1965-ம் ஆண்டு "வெண்ணிற ஆடை" வெளிவந்தது. இப்படத்தில்தான் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமானார். 
அவருக்கு அடுத்த முக்கிய வேடம் நிர்மலாவுக்கு. மற்றும் ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோரும் இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார்கள். முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம், ஸ்ரீதர் டைரக்ட் செய்த படம் என்பதால் "வெண்ணிற ஆடை"பரபரப்பாக ஓடியது. நிர்மலாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. 

"நிர்மலா" என்ற பெயர் பட உலகில் பலருக்கு இருந்ததால், `வெண்ணிற ஆடை' நிர்மலா என்று குறிப்பிடப்பட்டார். 



இதுபற்றி நிர்மலா கூறுகையில், "வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல். அதை உங்கள் பெயருக்கு முன் போடாதீர்கள் என்று பலர் கூறினார்கள். நானும், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடும்படி பட அதிபர்களிடம் கூறினேன். ஆனால், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடாமல் எந்த நிர்மலா என்று தெரியாது என்று கூறி, வெண்ணிற ஆடை என்று போட்டார்கள். அதுவே பிரபலமாகி விட்டது" என்று குறிப்பிட்டார்

ஆனாலும் ஒரு செண்டிமெண்ட் ..வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு திருமணம் ஆகவே இல்லை 


No comments:

Post a Comment