Wednesday 24 August 2016

எம்ஜியாரின் போட்டியாளர் ரஞ்சன்


எம்ஜியாரின் போட்டியாளர் ரஞ்சன் 




எம்ஜிஆரின் திரையுலக துவக்கத்தில் பெரும் போட்டியை தந்தவர் நடிகர் ரஞ்சன்.பட்டப்படிப்பு முடித்தவரான வாள் சண்டையிலும் புகழ் பெற்ற,ஐந்து மொழிகளில் பேசத்தெரிந்த ரஞ்சனை பார்த்தே பாடத்தெரியாதவர்களும் திரையில் ஜொலிக்க முடியும் என்பதை எம்ஜிஆர் உணர்ந்து கொண்டார்.


விக்ரமாதித்தன் படத்தில் வேண்டுமென்றே தவறாக எம்ஜிஆர் வாளால் தன்னை தாக்குவதாக ரஞ்சன் புகார் தந்திருந்தார்.இருவரிடையேயும் ஒரு நிழல் யுத்தம் ஆரம்பித்திருந்தது.






1950 ல் வெளியானதமிழின் பிரமாண்ட திரைப்படமான சந்திரலேகாவின் இந்தி டப்பிங் வெற்றி ரஞ்சனை இந்திக்கு கொண்டு சென்றதால் எம்ஜிஆரின் தடையற்ற முன்னேற்றம் சாத்தியமானது.
















இந்தியில் சில படங்களில் நடித்து திரும்பிய ரஞ்சன் தமிழில் படமின்றி தவித்தார்.எம்ஜிஆர் தேவர் இணைந்த முதல் படமான தாய்க்குப் பின் தாரம் ரிலீசுக்கு பின் இருவரிடையே அதன் காப்புரிமை தொடர்பாக மனஸ்தாபம் ஏற்பட்டது.


.எம்ஜிஆரிடம் முதல் படத்தில் கசப்பான அனுபவத்தை பெற்ற தேவர் வாய்ப்பில்லாத எம்ஜிஆரின் பழைய எதிரியான ரஞ்சனை நீலமலைத்திருடனில் நடிக்க வைத்தார்.ரஞ்சனின் மீள் வருகை சிலரை கலங்க செய்தது. எம்ஜிஆர் தேவருடன் இணக்கமாக போக விரும்ப, ரஞ்சனின் திரையுலக வாழ்வு முடிவுக்கு வந்தது.!

No comments:

Post a Comment