Friday 26 August 2016

அபூர்வ சகோதரர்கள் -விகடனின் கார்ட்டூன்



அபூர்வ சகோதரர்கள் -விகடனின் கார்ட்டூன் 





1949 தீபாவளி ரிலீசாகி வெளி வந்தது அபூர்வ சகோதரர்கள் என்ற ஜெமினியின் திரைப்படம் .1950 குடியரசு ஆகும் நேரத்தில் ஆந்திரா காரர்கள் 
சென்னையை தமிழ் நாட்டில் இருந்து பிரித்து தரும்படி கேட்டார்கள் 

இந்த திரைப்படத்தின் மைய கரு யாதெனில் ஒட்டி பிறந்த இரட்டையர் இருவரில் ஒருவர் உணர்ச்சி வசப்படும் போது இன்னொருவருக்கும் அதே உணர்வு ஏற்படும் .அண்ணன் காதலித்தால் தம்பி உணர்ச்சியால் துடிப்பான .இது கார்ஸிகான் பிரதர்ஸ் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது   

இதில் எம் கே ராதா இரட்டை வேடத்திலும் பானுமதி கதாநாயகியாகவும் நடித்தனர் .இதுவே நீரும் நெருப்பும் என்ற பெயரில் எஞ்சியார் ஜெயலலிதா நடிப்பில் வெளி வந்தது .அப்போது பரணீதரன் என்பவர் கார்டூனிஸ்ட்டாய்
இருந்தார் .
இந்த சினிமாவையும் ,ஆந்திரா சென்னை பிரட்சனை இரண்டும் சேர்த்து கார்ட்டூன் வரைந்து அப்போதைய ஆனந்தவிகடன் எடிட்டரும் 
நிர்வாகஸ்தருமான எஸ் எஸ் வாசன் அவர்களிடம் காட்டினார்   

இந்த அபூர்வசகோதரர்கள் ஐடியா அவருக்கு பிடித்து விட்டது 
இது எக்ஸலண்ட் ஐடியா தான் .ஆனால் நம்முடைய படத்திற்கு நாமே விளம்பரம் செய்வது போலாகி விடும் .எனவே தினமணியில் வந்தால் அதிகம் பார்ப்பார்கள் என்கிறார் 

அதற்கு பரணீதரன் இந்த கார்ட்டூன் வேறு எந்த பத்திரிக்கையிலும் வெளி வர்றத நான் விரும்பல .வந்தா விகடன்ல வரட்டும் இல்லேன்னா ...வெளிவராமல் போகட்டும் என்கிறார் 
மறுவாரம் அந்த கார்ட்டூன் வந்தது -பரணீதரன் விண்வெளியில் மிதந்தார்   

No comments:

Post a Comment