Thursday, 25 August 2016

பாடலாசிரியர் திரு. தஞ்சை ராமய்யாதாஸ் ஒரு சரித்திரம்

பாடலாசிரியர் திரு. தஞ்சை ராமய்யாதாஸ் 
ஒரு சரித்திரம் 

பாடலாசிரியர் திரு. தஞ்சை ராமய்யாதாஸ் அவர்கள் . 

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி. 
அங்கேய படித்து. ஆசிரியர் பயிற்சி பெற்றார், 
தமிழ் சங்கத்தில் படித்து புலவர் பட்டம் பெற்றார்.
சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றார்.

திரு டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். 


மார்டன் தியேட்டர்ஸின் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமனியில் தான் இவர் முதன் முதலில் பாடல்கள் எழுதினார்.

பின்னர் திகம்பர சாமியார்,
சிங்காரி 
திரு பி. நாகிரெட்டி மற்றும் சக்ரபாணி அவர்களின் விஜயா வாஹினி
தயாரித்த பெரும்பாலான படங்களுக்கு 
திரு சாலுரி ராஜேஸ்வரராவ் இசை 
திரு தஞ்சை ராமய்யாதாஸ் பாடல்கள். 
அப்படி விஜயாவின் ஆஸ்தான பாடலாசிரியராக இருந்தார்.இந்த படங்களுக்கெல்லாம் வசனகர்த்தாவும் இவரே.


பாதாள பைரவியில் அமைதியில்லாதென் மனமே பாடலை நாம் மறந்திருக்க நியாயமில்லை. 
அதை தொடர்ந்து மிஸ்ஸியம்மா, மாயா பஜார் என எத்தனை படங்கள் எத்தனை பாடல்கள்..கல்யாண சமையல் சாதம், 
எனையாளும் மேரி மாதா,

பிருந்தாவனமும் நந்த குமாரனும், 
பழகத்தெரிய வேணும், 
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே
என எத்தனை எத்தனை மனதை மயக்கும் பாடல்கள்
எம்.ஜி.ஆரின் மிகவும் பிரபலமான மலைக்கள்ளனில் ஏழிசை வேந்தர் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் ஒலித்த 
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”
பாடலை மறக்க முடியுமா.

பானை படித்தவள் பாகியசாலி (சாவித்த்ரி பாலாஜி ஜோடி , டி.எஸ்.துரைராஜ் அண்ணனாக நடித்த படம்)படத்தில் இடம்பெற்ற
“புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே” பாடல் மறக்ககூடியதா..

அஞ்சலி பிக்சர்ஸ் (அஞ்சலிதேவி,திரு ஆதி நாராயணராவ் )அவர்களின் ஆஸ்தான பாடலாசிரியரும் இவர் தான்.

மணாளனே மங்கையின் பாக்கியம்,
மங்கையர் உள்ளம் மங்காத செல்வம், 
அடுத்த வீட்டுப் பெண் என ஆஹாஅழைக்காதே நினைக்காதே ....இந்த பாடல் மிகவும் அழகான பாடல். இவரது சொல்லாற்றல் இதில் நன்கு விளங்கும்.

தேசுலாவுதே தேன் மலராலே இன்றும் 
இந்த கண்டசாலா சுசீலா டூயட்டிற்கு இணை உண்டா .. 
இதன் ஹிந்தி வடிவம் கூட தமிழ் அளவிற்கு இல்லை என்பது என் கருத்து.

கண்ணாலே பேசி பேசி,
மாலையில் மலர் சோலையில்,
கண்களும் கவி பாடுதே , 
மன்னவா வா ..


ஸ்ரீதரின் முதல் படமான அமரதீபம் (இது தான் அவரது முதல் படம் இயக்குனராக அல்ல) படத்தில் ஒலித்த ஜாலிலோ ஜிம்கானா பாடல் ஜிக்கியின் குரலில்

இன்றும் பிரபலமே. ஆம் புரியாத வார்த்தைகளை அறிமுக படுத்தியது இவரே . குறவன் குறத்தி பாடுவதாக அமைந்ததால் இப்படி அமைத்தார் அந்த பாடலை.

மதுரை வீரனில் ஒலித்த 
“வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பாத்து போங்க “ 

என்ற பாடல் நகைச்சுவையாக அமைந்த பாடல். எழுதியவர் இவரே

அதே போல் எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய படம் குலேபகாவலியில் இன்றும் நம் நெஞ்சை வருடும் பாடல் மயக்கும் மாலை பொழுதே நீ போ போ ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் பாடிய பாட்லை எழுதியது இவர். அதே படத்தில் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்க ஜவாபு என்ற நகைச்சுவை பாடலை சந்திரபாபுவுக்கு எழுதியதும் அவரே.

குலேபகாவலி கதையை எழுதியதும் இவரே. பகடை பன்னிரெண்டு என்ற இவரது கதைதான் எம்.ஜி.ஆருக்காக குலேபகாவலியாக மாறியது.

லலிதாங்கி படத்தை தயாரித்தார் 
(முதலில் இதில் நடித்தது எம்.ஜி.ஆர்) 
பின் சிவாஜி - பானுமதி நடித்து வெளிவந்தது ராணி லலிதாங்கி.
தேவிகா அறிமுகமானதும் இந்த படத்தில் தான்.

இவர் 1965’ல் மறைந்ததால் நஷ்டம் தமிழ் திரையுலகிற்கே . திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது “திருக்குறள் இசையமுதம்” என்ற புத்தகத்தை எழுதினார்.

இவருக்கு அரசியல் வட்டாரத்தில் உள்ள எல்லோருடனும் நல்ல நட்பு இருந்தது. இவர் திரையுலகிற்கு தந்த இன்னொரு சொத்து வசனகர்த்தா திரு ஆரூர் தாஸ் அவர்கள்.ஜேசுதாஸ் என்ற பெயரை மாற்றி ஆரூர்தாஸ் என்று மாற்றியவரும் தஞ்சை ராமய்யாதாஸ் அவர்களே .

கதை,வசனம் பாடல்கள் என்று மூன்றையும் ஒரு படத்திற்காக செய்த பெருமை திரு ராமய்யாதாஸையே சேரும்.

வேதனையான விஷயம் என்னவென்றால் இவரது புகைப்படம் internet’ல் இல்லாதது தான். இவர் எப்படி இருந்தார் என்று இவரது ரசிகனான எனக்கே தெரியாதபோது இன்றைய சமுதாயத்திற்கு எவ்வாறு தெரியும் .. வேதனையான விஷயம் இது.

மிகுந்த வேதனையளிக்கும் விஷயம். இவர் 1965’ல் மறையாமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ நல்ல நல்ல பாடல்களை நமக்கு தந்திருப்பார் என்பதில்
எள்ளளவும் ஐயம் இல்லை ..

No comments:

Post a Comment