Friday 26 August 2016

நடிகர் பாலாஜி - பல காதலுக்குபச்சை கொடி காட்டியவர்


நடிகர் பாலாஜி - பல காதலுக்குபச்சை கொடி காட்டியவர்   


பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் கிரிஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண். இந்த இரண்டாவது தாரத்தின் மகன் தான் பாலாஜி. இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை பாலாஜி திரும்பி பார்த்தபோது;



ஜெமினி கணேசனின் உற்ற நண்பர், பாலாஜி










நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி. 

இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவியானார். 

‘படித்தால் மட்டும் போதுமா’வில் சிவாஜிக்கு அண்ணனாக
 ‘பலே பாண்டியா’வில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும்
 ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர் 
தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது. 

நடிகராக திரையில் கதாநாயகனாக, 
இரண்டாவது கதாநாயகனாக, 
கொமெடியனாக, 
வில்லனாக நடித்தவர். 

இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருக்கும். 
நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை 
பார்த்துக்கொண்டே ‘பிரேமபாசம்’ படத்தில் ஜெமினிக்கு
 தம்பியாய் நடிக்கும் போது ஜெமினி கணேசனின் 
மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர், 

ஜெமினி - சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி.

ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும் போது ஜெமினி 
‘டே பாலாஜி சாவித்திரி அப்பா வாரானா பார்ரா. வந்தா உடனே சிக்னல் கொடு’ 


வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே. ஆர். விஜயாவை 
திருமணம் செய்யவும் துணை நின்றவர் தான் பாலாஜி.
 பி. பி. ஸ்ரீனிவாசனின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது.

‘ஆண்டடொன்று போனால் வயதொன்று போகும்’
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்! 
நெருப்பாய் எரிகிறது’
‘பண்ணோடு பிறந்தது கானம் குல பெண்ணோடு 
பிறந்தது நாணம்’
‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’
‘பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை’
‘ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்!’
‘உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ’
‘இரவு முடிந்து விடும், முடிந்தால் பொழுது புலர்ந்து விடும்’

ஜெயலலிதா போராட்டமான தன் அரசியல் சூழலிலும் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டார்.

 அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது. அவர் சொன்னது கூட மிகை இல்லை. அவருடைய அண்ணனை இழந்துவிட்டார். பாலாஜி பற்றி மறுபக்கமாக சில விஷயங்கள் உண்டு. 

4 comments:

  1. https://www.facebook.com/rprajanayahem/posts/1557924741087653?pnref=story

    Why do you copy my article? It's plagiarism

    ReplyDelete
  2. http://rprajanayahem.blogspot.in/2016/11/blog-post.html
    திருட்டு வகையில் மகா மோசமானது அறிவுத்திருட்டு.
    ஏன்டா இப்படியெல்லாம் செய்ற..

    ReplyDelete
  3. http://rprajanayahem.blogspot.in/2016/11/blog-post_18.html

    ReplyDelete
  4. https://www.facebook.com/rprajanayahem/posts/1886066654940125?comment_id=1887947818085342&notif_t=feed_comment&notif_id=1479722176573784

    ReplyDelete